All pass system

10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் ஆல் பாஸ்திட்டம்ஆகஸ்ட்
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களை, ஆல் பாஸ்செய்யும் திட்டத்தை, பல நிபந்தனைகளுடன், 10ம் வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், பெயில்ஆக்கி விடாமல்,அவர்களை, பாஸ் செய்து, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த அடிப்படையில், தற்போது பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது.
ஆனால், இந்த திட்டத்தின்படி, அனைவருக்கும் கட்டாய பள்ளிக்கல்வி வேண்டும் என்ற நோக்கம் சரியாக நிறைவேறவில்லைஎன, புகார் எழுந்தது. அதனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், மத்திய கல்வி ஆலோசனை வாரியம் சார்பில், துணை குழு அமைக்கப்பட்டு, பல மாநிலங்களில் ஆய்வு நடந்தது.
ஆலோசனை கூட்டம்
இந்த ஆய்வு முடிவுகளை, அரியானா மாநில கல்வி அமைச்சர் கீதா புக்கல், மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளார். இதிலுள்ள அம்சங்களை, அமல்படுத்துவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில்,டில்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன்படி, கட்டாய கல்வி உரிமை சட்ட அடிப்படையிலான, ஆல் பாஸ்திட்டத்தை, 10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிபந்தனைகள் விவரம்:
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, தற்போது எட்டாம் வகுப்பு வரை அமலில் உள்ள, ஆல் பாஸ்திட்டம், பல நிபந்தனைகளுடன், 10ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும். தேர்வில், சி.சி.இ., எனப்படும் தொடர் மதிப்பீட்டு முறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
தேர்வில், மூன்று, ஐந்து மற்றும் எட்டு என, மூன்று தரவரிசை வழங்கப்படும். இதில், ஐந்துக்கு பின் தர வரிசையில் இடம் பெறும் மாணவர்கள், பாஸ்செய்யப்பட மாட்டார்கள். அவர்களை தேர்ச்சி பெற வைக்க, வகுப்பாசிரியர் சிறப்பு பயிற்சி தர வேண்டும்.
அனைத்து வகுப்பு மாணவர்களும், குறைந்தது, 80 முதல் 85சதவீதம் வரை, பள்ளிக்கு, ஆப்சென்ட் ஆகாமல் வர வேண்டியது கட்டாயம்.
குறைந்தபட்ச தரம் கூட பெறாத மாணவர்களின்,ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி குறித்த ஆய்வு நடத்த வேண்டும்.
முடிந்த அளவுக்கு மாணவர்கள் வகுப்புகளில் தேங்காமல், 10ம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக, மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் முறையை மாற்றி, புரிந்து படித்தல்,தனித்திறன்களை வளர்த்தல், செய்முறைப் பயிற்சிகள் அளிக்கும் வகையில், தொடர் மதிப்பீட்டு முறை கட்டாயமாகும்.
இவ்வாறு நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக,ஒவ்வொரு மாநிலமும் விரிவான கருத்துக்களை தெரிவிக்கும்படியும் மத்திய அரசு கூறியுள்ளது.

counselling

  1. DEO 
  2. HSS HM transfer (Within District & Other District)
  3. HSS HM Promotion - HS to HSS & Direct PG to HSS (5:2 ratio 4PG+1HM+1PG+1HM)
  4. HS HM transfer
  5. HS HM Promotion (BT to HS & PG to HS)
  6. BT transfer
  7. BT  Promotion (SGT  to BT )
  8. 10% is reserved for total vacancies for absent candidates in counselling
  9. Relinquish candidates cannot get promotion for next 3 years

01.08 particulars

  1. Add staff list in Date of joining DOJ in present location wise
  2. add staff mobile number below name
  3. Seperate GO number only for each staff
  4. add school upgrade go number also
  5. In staff fixation through 1.8 particulars select surplus by last joined staff in language, if morethan one staff joined in same date use latest DOB
  6. SGT can also take any class

Programmes for Teachers and Student




* Assigning Guide Teacher
* Training for teachers  
* Motivating Teachers
* Prepared Study Materials
* SMDC Meeting
* Awareness meeting
* Regular Practice
* Acquiring Play Ground
* Use of language Lab
* Activity based methods
* Group Discussion
* Awards - Rewards
* Club Activities
* Writing Practice
* Yoga
* Learning by doing
* Use differentiated tasks
* Smart Class Room
* Adapting the Children
* Counseling
* Competition


Educational days

கல்வி தொடர்பாக கொண்டாடப்படும் தினங்கள்  :

ஜனவரி 23 - தேசிய படிக்கும் தினம்.
பிப்ரவரி 21 - தாய்மொழி தினம்.
பிப்ரவரி 28 - அறிவியல் தினம் (சர் சி.வி.ராமன் பிறந்த தினம்).
மே 11 - தேசிய தொழில்நுட்ப தினம் (பொக்ரான் 2- இந்தியா அணுகுண்டு சோதித்த தினம்).
ஜூலை 1 - மருத்துவர் தினம் (மருத்துவர் பிபன் சந்திர ராயின் பிறந்த நாள்)
ஜூலை 15 - கல்வி முன்னேற்ற தினம் (காமராஜர் பிறந்த நாள்).
ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம் (நூலக நிபுணர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாள்).
செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் (ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்).
செப்டம்பர் 8 - அனைத்துலக எழுத்தறிவு நாள்.
செப்டம்பர் 15 - பொறியாளர் தினம் (விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்).
நவம்பர் 11 - தேசிய கல்வி தினம். (அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்).
Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos